Enable Javscript for better performance
வெவ்வேறு விபத்தில் 3 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் அருகே செவ்வாய்க்கிழமை நேரிட்ட வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்தனர்.

    மன்னார்குடி குருவாய்மொழியைச் சேர்ந்தவர் தர்மராஜ் (40). இவரது மனைவி கல்யாணி (36). இருவரும் செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் கொரடாச்சேரி வெட்டாறு பாலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

    இதில் காயமடைந்த தர்மராஜ், கல்யாணி ஆகிய இருவரும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து கொரடாச்சேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    மற்றொரு சம்பவம்: இதேபோல், செவ்வாய்க்கிழமை திருவாரூர் அருகேயுள்ள வேப்பதாங்குடியைச் சேர்ந்த முருகையன் (62), திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலை மாவூர் கடைவீதியில் சாலையை கடக்க முயன்றபோது, அவ்வழியே சென்ற இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்தார். இதையடுத்து, அவர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து, மாவூரைச் சேர்ந்த விக்னேஷ் (19) மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai