Enable Javscript for better performance
கடன் பணத்தை கணவர்எடுத்துச் சென்றதால் மனைவி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    கடன் பணத்தை கணவர்எடுத்துச் சென்றதால் மனைவி தற்கொலை

    By திருவாரூர்  |   Published on : 04th March 2016 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகளிர் சுயஉதவிக் குழுவில் கடனாகப் பெற்ற பணத்தை கணவர் எடுத்துச் சென்றதால், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

    திருவாரூர் அருகேயுள்ள ராதாநல்லூரைச் சேர்ந்த கண்ணதாசன் மனைவி சிவசங்கரி (30). இவர் மகளிர் சுய உதவிக் குழுவில் கடனாக வாங்கிய பணத்தை வீட்டில் வைத்திருந்தாராம். அந்தப் பணத்தை கண்ணதாசன் எடுத்துச் சென்று செலவு செய்ததால், மனமுடைந்த சிவசங்கரி கடந்த மார்ச் 1 ஆம் தேதி வீட்டில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்தார்.

    இதையறிந்த குடும்பத்தினர் அவரை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அங்கு அவர் புதன்கிழமை (மார்ச் 2) உயிரிழந்தார்.

    இதுகுறித்த சிவசங்கரியின் சகோதரர் சக்திவேல் அளித்த புகாரின்பேரில், திருவாரூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai