சுடச்சுட

    

    நகைக் கடை உரிமையாளர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

    By திருவாரூர்,  |   Published on : 04th March 2016 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் கலால் வரிவிதிப்பு அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூரில் நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.

    மத்திய நிதிநிலை அறிக்கையில் வெள்ளி நீங்கலாக தங்க நகை உள்ளிட்ட ஆபரணங்களுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தங்க நகை விற்பனையாளர்கள் மார்ச் 2 ஆம் தேதி முதல் கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், 2 ஆவது நாளான வியாழக்கிழமை திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் கடையடைப்பு நடைபெற்றது.

    திருவாரூர் காசுகடைத்தெருவில் 100-க்கும் மேற்பட்ட நகைக் கடைகளை அடைத்து நகைக் கடைக்காரர்கள் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மத்திய அரசின் வரி விதிப்பால் நகை வாங்குவோர் சவரனுக்கு கூடுதலாக ரூ. 250 வரை செலவிட நேரிடும். மேலும், நகை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் இதைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும்.

    எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai