சுடச்சுட

    

    பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு: 3 பெண்கள் கைது

    By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 04th March 2016 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட சேலத்தைச் சேர்ந்த 3 பெண்களை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    குன்னலூர் மேச்சேத்தியைச் சேர்ந்த சண்முகம் மனைவி மலர்க்கொடி. இவர் திங்கள்கிழமை திருத்துறைப்பூண்டி வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில் சென்றார். அப்போது, அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

    இதுகுறித்து மலர்க்கொடி அளித்த புகாரின்பேரில், திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 3 பெண்களை பிடித்து போலீஸார் விசாரித்ததில், அவர்கள் மூவரும் சேலம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்த முருகன் மனைவி தேவி (32), விக்னேஷ் மனைவி சாதனா (23) மற்றும் பழனியம்மாள் (37) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் மூவரும் பேருந்தில் மலர்க்கொடியிடம் 3 சவரன் தங்கச் சங்கிலியை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களிடமிருந்து தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, அவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai