சுடச்சுட

  

  வெஸ்டன் யூனியன் சார்பில் வாடிக்கையாளருக்கு 50 கிராம் தங்கம் பரிசு

  By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 04th March 2016 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில், பணப்பரிவர்த்தனை செய்யும் வெஸ்டன் யூனியன் நிறுவனம் சார்பில், வாடிக்கையாளருக்கு 50 கிராம் தங்கம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சிக்கு வர்த்தகர் சங்கத் தலைவர் கே.எஸ். செந்தில்குமார் தலைமை வகித்தார். நிறுவனத்தின் நிறுவனர் ஏ.எல். செல்லையா, என். அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ். நாராயணமூர்த்தி வரவேற்றார்.

  இந்நிகழ்ச்சியில், நிறுவனத்தின் துணைத் தலைவர் மும்பையைச் சேர்ந்த ரவிராஜ் ஷெட்டி, தென் மண்டல மேலாளர் ஹரிஹரபிரபு ஆகியோர் பங்கேற்று, வாடிக்கையாளர் முகம்மது யாசின் குடும்பத்தினருக்கு 50 கிராம் தங்கம் வழங்கி பேசியது:

  அகில இந்திய அளவில் பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட 15 லட்சம் பேரில் 1500 பேருக்கு தலா 1 கிராம் தங்கமும், 10 பேருக்கு தலா 50 கிராம் தங்கமும் வழங்க தேர்வு செய்யப்பட்டது. இதில் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த முகம்மது யாசின் குடும்பத்தினருக்கு 50 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

  இதில் மூத்த வழக்குரைஞர் நா. பாலன், திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார், சசிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai