Enable Javscript for better performance
வேலைவாய்ப்பு முகாம்: வேலுடையார் பாலிடெக்னிக் மாணவர்கள் 36 பேர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    வேலைவாய்ப்பு முகாம்: வேலுடையார் பாலிடெக்னிக் மாணவர்கள் 36 பேர் தேர்வு

    By திருவாரூர்,  |   Published on : 04th March 2016 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிவளாக வேலைவாய்ப்பு முகாமில் வேலுடையார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 36 பேர் தேர்வாகியுள்ளனர்.

    திருவாரூர் அருகே அம்மையப்பனில் செயல்பட்டு வரும் வேலுடையார் பாலிடெக்னிக் கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் வெளி வளாக வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர்.

    இதில் லூக்காஸ் டிவிஎஸ் என்ற நிறுவனத்தில் பணியாற்ற இயந்திரவியல் துறையிலிருந்து 20 மாணவர்கள், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையிலிருந்து 9 மாணவர்கள், யுரேகா போர்ப்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையிலிருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    வேலைவாய்ப்பு முகாமில் தேர்வாகிய மாணவர்களுக்கு வேலுடையார் கல்விக் குழுமத் தலைவர் கே.எஸ்.எஸ். தியாகபாரி, கல்விக் குழுமச் செயலர் எஸ். செந்தூர்பாரி, கல்விக்குழும உறுப்பினர் கே.ஜி. சீலன், கல்லூரி முதல்வர் ஜி. மணிகண்டன் உள்ளிட்டோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai