Enable Javscript for better performance
1.90 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு- Dinamani

சுடச்சுட

    

    1.90 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு

    By திருவாரூர்,  |   Published on : 04th March 2016 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் 1.90 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கூறினார்.

    திருவாரூர் அருகேயுள்ள சிமிழியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கோமாரி நோய் தடுப்பு முகாமைத் தொடங்கி வைத்து ஆட்சியர் பேசியது:

    கோமாரி நோயைக் கட்டுப்படுத்த திருவாரூர் மாவட்டத்துக்கென 2 லட்சம் தடுப்பூசிகளை அரசு வழங்கியுள்ளது. மார்ச் 23 ஆம் தேதி வரை கிராமம் வாரியாக மருத்துவக் குழுவினர் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 1.90 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர், தங்களிடம் 4 மாதங்களுக்கு மேல் வயதுள்ள கன்றுகளுக்கும், சினை, கறவை பசுக்கள், எருமைகள் மற்றும் எருதுகளுக்கு தடுப்பூசி செலுத்தி நோயினால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்க்கலாம் என்றார். முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் தங்கவேல், துணை இயக்குநர் முகமது உதுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai