Enable Javscript for better performance
டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    டேராடூன் ராணுவ கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

    By திருவாரூர்,  |   Published on : 05th March 2016 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டேராடூனிலுள்ள ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2017 ஆம் ஆண்டுக்கான 8 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு அக்கல்லூரியிலிருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2004 ஜனவரி 2 ஆம் தேதி மற்றும் 2005 ஜூலை 1 ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட நாள்களில் பிறந்தவராகவும், 2017 ஜனவரி 1 ஆம் தேதியன்று 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பவர் அல்லது முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    தகுதித் தேர்வு விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பு ஆகியவற்றை பொதுப் பிரிவினர் அஞ்சலில் பெற ரூ. 490, பட்டியல் மற்றும் அட்டவணை இனத்தவர் அஞ்சலில் பெற ரூ. 435-க்கும் டேராடூன் பாரத ஸ்டேட் வங்கியில் மாற்றத் தக்க வகையில் காசோலை, அதனை கமாண்டன்ட், ராஷ்டிரிய இந்தியன் மிலிட்டரி கல்லூரி டேராடூன் - 248 003 உத்தரகண்ட் என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

    பூர்த்தி செய்த விண்ணப்பம் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சென்னை -3 என்ற முகவரிக்கு 31.3.2016 -க்குள் அனுப்ப வேண்டும். எழுத்துத் தேர்வு 1.6.2016 மற்றும் 2.6.2016 தேதிகளிலும், வாய்மொழித் தேர்வு 4.10.2016 ஆகிய தேதியில் நடைபெறுகிறது.

    மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம் அல்லது ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai