சுடச்சுட

    

    திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி:அஞ்சலகங்களில் ஏடிஎம் மையம் திறப்பு

    Published on : 05th March 2016 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களின் வசதிக்காக ஏடிஎம் (தனியங்கி பணம் எடுக்கும் இயந்திரம்) மையம் திறக்கப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டியில்...

    திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகத்தில் ஏ.டி.எம். மையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை கோட்ட அஞ்சல்துறை கண்காணிப்பாளர் சி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். திருத்துறைப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். கண்ணதாசன் முன்னிலை வகித்தார். ஏ.டி.எம். மையத்தை நகர்மன்றத் தலைவர் கே. உமாமகேஸ்வரி திறந்துவைத்தார். நிகழ்ச்சியில் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் சி. பன்னீர்செல்வம் பேசியது: அஞ்சல்துறை இந்தியாவில் 1897-இல் பிரிட்டிஷ் ஆட்சியில் தொடங்கப்பட்டு, இந்தியா முழுவதும் நரம்புமண்டலம்போல நகர்ப்புறங்கள் மட்டுமின்றி குக்கிராமங்கள் வரை தொடர்ந்து தன்னலமற்ற சேவையாற்றி வருகிறது.

    இந்தியா முழுவதும் 1000 தலைமை அஞ்சலகங்களில் ஏ.எடி.எம். மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு தமிழகத்தில் 94 தலைமை அஞ்சல் நிலையங்களில் 80 ஆவது ஏ.டி.எம். மையமாக பட்டுக்கோட்டை கோட்டத்தில் முதலாவதாகவும் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.

    இதில் கோட்ட துணைக் கண்காணிப்பாளர் அருள்தாஸ், உட்கோட்ட ஆய்வாளர்கள் பிரேம் ஆனந்த், கார்த்திகேயன், சிவசங்கரி, தலைமை அஞ்சல் அலுவலர் ராமகிருஷ்ணன், துணை அஞ்சல் அலுவலர் ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். துணை அஞ்சல் அலுவலர் அன்பழகன் வரவேற்றார். அஞ்சல் ஆய்வாளர் துபே அபிஷேக் மதுசூதன் நன்றி கூறினார்.

    மன்னார்குடியில்...

    மன்னார்குடி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரம் (ஏ.டி.எம்) தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு தஞ்சாவூர் கோட்ட அஞ்சல்துறை முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் எஸ். பஞ்சாபிகேசன் தலைமை வகித்து பேசியது: ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் முதல் முறையாக அஞ்சல்துறையின் சார்பில் ஏடிஎம் மையம் மன்னார்குடி தலைமை அஞ்சலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக மன்னார்குடி தலைமை அஞ்சலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தி பணம் எடுக்கலாம் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக மன்னார்குடி நகர்மன்றத் தலைவர் டி. சுதா அன்புச்செல்வம் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி ஏடிஎம் இயந்திரத்தின் பயன்பாட்டை தொடங்கிவைத்து வாடிக்கையாளர்களுக்கு ஏடிஎம் அட்டைகளை வழங்கினார்.

    இதில் தலைமை அஞ்சல் அலுவலர் சார்லஸ் சீலன்ராஜ், உதவி தலைமை அஞ்சலர் சிவராமலிங்கம், கூட்டுறவு வங்கி இயக்குநர் வி.என். அன்புச்செல்வம், நகர்மன்ற உறுப்பினர் ஏ. தீன்முகமது, ஓய்வுபெற்ற உதவி கண்காணிப்பாளர் ஜி. குப்புசாமி, அலுவலர்கள் கோ. தாயுமானவன், சேதுராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai