சுடச்சுட

    

    பிளஸ் 2: திருவாரூர் மாவட்டத்தில் 14,142 பேர் எழுதினர்

    By திருவாரூர்,  |   Published on : 05th March 2016 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 தேர்வில் 14,142 பேர் பங்கேற்று எழுதினர்.

    மாவட்டத்தில் 43 தேர்வு மையங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வை 5,903 மாணவர்கள், 8,142 மாணவிகள், தனித் தேர்வர்கள் 58 மாணவர்கள், 39 மாணவிகள் என மொத்தம் 14,142 பேர் எழுதினர்.

    தேர்வில் 6 ஆய்வு அலுவலர்கள், 43 முதன்மை கண்காணிப்பாளர்கள், 9 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 43 துறை அலுவலர்கள், 35 கூடுதல் துறை அலுவலர்கள், 847 அறை கண்காணிப்பாளர்கள், 12 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 12 வழித்தட அலுவலர்கள், 70 பறக்கும் படையினர் என மொத்தம் 1077 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் அருகேயுள்ள புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், முதன்மைக் கல்வி அலுவலர் மணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் காலை 8.30 மணிக்கே வந்து விட்டனர். பள்ளிகளில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    மாணவர்கள் மகிழ்ச்சி: பிளஸ் 2 தேர்வின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. இதில் கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai