Enable Javscript for better performance
மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்:அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்- Dinamani

சுடச்சுட

    

    மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்:அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

    By திருவாரூர்  |   Published on : 05th March 2016 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினின் 64 ஆவது பிறந்த நாளையொட்டி, திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் மார்ச் 1 ஆம் தேதி பிறந்த 6 குழந்தைகளுக்கு திமுக சார்பில், வெள்ளிக்கிழமை தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆர். ரஜினிசின்னா தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் பங்கேற்று, திருவாரூர் பள்ளிவாசல் தெருவில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் மார்ச் 1 ஆம் தேதி பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். முன்னதாக, கீழவீதியில் அமைக்கப்பட்டிருந்த புதிய கொடிக் கம்பத்தில் திமுக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் நகரச் செயலர் எஸ். பிரகாஷ், சிறுபான்மை நலப் பிரிவு மாவட்ட அமைப்பாளர் எஸ். தாஜூதீன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் கருணாநிதி, இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, மாணவரணி நிர்வாகி சந்திரசேகரன், ஒன்றியச் செயலாளர்கள் தேவா (திருவாரூர்), பாலசந்தர் (கொரடாச்சேரி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai