சுடச்சுட

    

    வீடுகளுக்குச் சென்று ரத்த மாதிரி எடுக்கும் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

    By திருவாரூர்  |   Published on : 05th March 2016 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வீடுகளுக்குச் சென்று ரத்த மாதிரி எடுக்கும் தொழில்நுட்புநர் பயிற்சிக்கு விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களுக்கு வீடுகளுக்குச் சென்று ரத்த மாதிரி எடுக்கும் தொழில்நுட்புநர் பயிற்சி இலவசமாக 3 மாதங்களுக்கு அளிக்க சென்னை அப்போலோ மெட் ஸ்கில்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.

    எஸ்.எஸ்.எல்.சி. அல்லது பிளஸ் 2 -வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் கிராமப்புறமாக இருந்தால் ரூ. 98,000, நகர்ப்புறமாக இருந்தால் ரூ. 1.20 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சி சென்னை, கோவை, மதுரை, வேலூர், சேலம் மற்றும் தேனி ஆகிய இடங்களில் அளிக்கப்பட உள்ளது.

    விண்ணப்பிக்க விரும்புவோர் அப்போலோ மெட் ஸ்கில்ஸ், விக்ரம் ஸ்டுடியோ வளாகம், எண். 289, மேற்கு சிவன்கோவில் தெரு, வடபழனி, சென்னை -26 என்ற முகவரிக்கு மார்ச் 20 ஆம் தேதிக்குள் முழு விவரத்துடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai