சுடச்சுட

  

  திருவாரூரில் மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு மாவட்ட திமுக செயலர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும்  போட்டியிட இசைவு தெரிவித்த திமுக தலைவர் மு. கருணாநிதிக்கு நன்றி, அவ்வாறு போட்டியிட்டால் சுமார் 1 லட்சம் வாக்குகள்  வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைப்பது.

  திருவாரூர் மாவட்டத்துக்குள்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்த திமுக தலைவர் மு. கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

  கலை இலக்கியப் பகுதறிவு பேரவை சார்பில் மாவட்டத்தில் நாடகம், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் திமுகவின் சாதனைகளை விளக்கிக் கூறி வாக்குகள்  சேகரிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்தில் மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி,  ஒன்றியச் செயலர்கள் தேவா, கலியபெருமாள்,  நகரச் செயலர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  கலை இலக்கியப் பகுதறிவு பேரவை மாநில துணைச் செயலர் மறைந்த நடிகர்  குமரிமுத்துவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai