சுடச்சுட

    

    குடவாசல் அருகே 2 பெண்களை காணவில்லை எனப் புகார்

    By திருவாரூர்  |   Published on : 06th March 2016 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடவாசல் அருகே 2 பெண்கள் காணாமல் போனதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    குடவாசல் அருகேயுள்ள அடவங்குடி அல்முகமதியார் தெருவைச் சேர்ந்தவர் சதயதுல்லா மகள் யாஸ்மின் (40). இவரது கணவர் ஜாகிர் உசேன் வெளிநாட்டில் உள்ளார்.  மகன், மகள் ஆகியோருடன் வசித்து வந்த யாஸ்மின் கடந்த பிப். 25-ஆம் தேதி தர்காவுக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    இதுகுறித்து யாஸ்மின் தாய் சதயதுல்லா அளித்த புகாரின்பேரில், குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    இதேபோல், அரசவனங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பவானி (28). கணவரை இழந்தவர். இவர் கடந்த பிப். 15 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பவானியின் உறவினர் கலாவதி அளித்த புகாரின்பேரில், குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai