சுடச்சுட

  

  கொலை மிரட்டல்: ஒன்றியக்குழுத் தலைவர் மீது வழக்கு

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 06th March 2016 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் அவரது கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

  திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு உறுப்பினராக வழக்குரைஞர் சி. சுரேந்திரன் உள்ளார்.

  இவர் ஆலிவலம் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு விவரம்: ஒன்றியக்குழு உறுப்பினர்கள் டி. சுரேந்திரன், வி.டி. செல்வன், எம்.என். ராஜா, எஸ். ஞானசெளந்தரி ஆகியோர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிர்வாக சீர்கேடுகள் குறித்தும், ஒன்றியக்குழுத் தலைவர் வேதநாயகி, அவரது கணவர் கா. சிங்காரவேலு ஆகியோர் மீதும் பல்வேறு புகார் மனுக்கள் அனுப்பியுள்ளோம்.

  மேலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவு பெறப்பட்டது. அதில் ஒன்றியக்குழுத் தலைவரின் கணவர் மீது மணல் திருட்டு, மின்சாரம் திருட்டு, அதிகாரிகளை மிரட்டுதல் போன்ற குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு ஒன்றியக்குழுத் தலைவர் மீது உள்ளாட்சி அமைப்புச் சட்டம் 207ஐ அமல்படுத்த அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு வழக்கு முடிவுக்கு வந்தது.

  ஆனால், அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பிப். 22 -இல் ஒன்றிய அலுவலகம் முன்பாக நாங்கள் 4 பேரும் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தோம். இதையறிந்த ஒன்றியக்குழுத் தலைவர் பிப். 19 ஆம் தேதி செல்லிடப்பேசியில் எங்களை தொடர்பு கொண்டு போராட்டத்தை நிறுத்தாவிட்டால் 4 பேரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார் என்று புகார் மனுவில் டி. சுரேந்திரன் கூறியிருந்தார்.

  புகாரின்பேரில், ஒன்றியக்குழுத் தலைவர் வேதநாயகி, அவரது கணவர் தலைக்காட்டைச் சேர்ந்த சிங்காரவேலு ஆகிய இருவர் மீதும் ஆலிவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai