சுடச்சுட

  

  கோரையாற்றின் குறுக்கே புதிய நீரொழுங்கி அமைக்கும் பணி ஆய்வு

  By மன்னார்குடி  |   Published on : 06th March 2016 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள பைங்காட்டூரில் கோரையாற்றின் குறுக்கே புதிய நீரொழுங்கி (ரெகுலேட்டர்) அமைக்கும் பணியை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  பைங்காட்டூரில் கோரையாற்றின் குறுக்கே புதிய நீரொழுங்கி அமைத்தால் ரெங்கநாதபுரம், பைங்காட்டூர், வாட்டார், செல்லதூர், கடைத்தெரு, பொன்னுகொண்டனார் ஆகிய வாய்க்கால்களுக்கு போதுமான அளவு பாசன நீர் வழங்கலாம், இதன்மூலம் 6,042 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும், கடைத்தெரு பாசன வாய்க்காலில் தடுப்பணை கட்டினால் 245 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்ற இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு புதிய நீரொழுங்கி (ரெகுலேட்டர்) அமைக்க ரூ. 3 கோடியும், தடுப்பணை கட்ட ரூ. 1 கோடியும் ஒதுக்கீடு செய்தது.

  இந்நிலையில், பைங்காட்டூரில் கோரையாற்றில் நீரொழுங்கியும், கடைத்தெரு பகுதி கோரையாற்றில் தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருவதை திருவாரூர் வெண்ணாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் பி. ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் மூர்த்திராஜன், உதவிப் பொறியாளர் செளந்தரராஜன் ஆகியோர் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, கட்டுமான ஒப்பந்ததாரருக்கு ஆலோசனைகள் வழங்கி பணிகளை விரைந்து முடிக்கும்படி அறிவுறுத்தினர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai