சுடச்சுட

  

  "தகவல் தொழில்நுட்பத்துறையில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு'

  By மன்னார்குடி  |   Published on : 06th March 2016 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உலக அளவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு காத்திருக்கிறது என்று ஜோர்டான் அல்பல்கா பல்கலைக்கழக துணைவேந்தர் ஓம்ர் ஏ. அல்ஹயாசாத் கூறினார்.

  மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை, செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில்  வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலகளாவிய பிக்டேட்டா  அறிவியல், பகுப்பாய்வு மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக  கலந்துகொண்டு அவர்

  பேசியது:

  எதிர்வரும் காலங்களில் கல்வித்துறையிலும், வேலைவாய்ப்பிலும்  முன்னிலையில் இருக்கப்போவது தகவல் தொழில்நுட்பத்துறை தான்.

  தற்போதைய கணக்கெடுப்பில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முடியும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

  தற்போது, மாணவ, மாணவிகளிடம் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் சேர அதிக ஆர்வம் காட்டுவதால்தான் கிராமப்புறச் சூழலில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியிலும் இப் பாடப்பிரிவுகள் தொடங்கப்படுகிறது.

  இதன்மூலம் உலக அளவில் தங்களுக்குள்ள திறனை வெளிக்கொண்டு வந்து போட்டி போட முடியும்.

  திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட  கல்லூரிகளில் முதல் முறையாக செங்கமலத்தயார் கல்லூரியில் தான் அறிவியல் பகுப்பாய்வு தொடர்புடைய பாடப்பிரிவு  தொடங்கப்பட்டுள்ளன.

  இந்தப் பாடப் பிரிவை எடுத்து படித்தவர்களுக்கு உலகில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் வேலை வாய்ப்பு எஜ்ளிதாக அமையும் என்றார்.

  விழாவில் அறிவியல் மாநாட்டு மலரை செங்கமலத்தாயார்  கல்லூரித் தாளாளர் வி. திவாகரன் வெளியிட, அதனை  ஜோர்டான் அல்பல்கா பல்கலைக்கழக துணைவேந்தர் ஓம்ர் ஏ. அல்ஹயாசாத் பெற்றுக்கொண்டார்.

  சிங்கப்பூர் சிட்டி வங்கியின் ஆசியா, பசிபிக் கண்டத்தின்  துணைத் தலைவர் கண்ணன் சதாசிவம், சிங்கப்பூர் கீப்பல் நிறுவனத்தின் தலைவர் சுப்பிரமணியன் அன்பழகன், திண்டுக்கல்  காந்தி கிராம் நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர்  சண்முகவடிவு ஆகியோர் கருத்தரங்கில் பேசினர்.

  பல்வேறு மாநிலங்களிலிருந்து கலந்துகொண்ட  மாணவ, மாணவிகள் தங்களது அறிவியல், பகுப்பாய்வு கருத்துகளை  சமர்ப்பித்தனர். மாநாட்டுக்கு கல்லூரித் தாளாளர் வி. திவாகரன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீநாத் முன்னிலை வகித்தார்.

  முதல்வர் எஸ். அமுதா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் கீதா நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai