சுடச்சுட

    

    நீடாமங்கலத்திலிருந்து 2,000 டன் எடையுள்ள நெல் மூட்டைகள் தருமபுரிக்கு அரவைக்காக சரக்கு ரயில் மூலம் சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.

    நீடாமங்கலம், மன்னார்குடி பகுதிகளில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் அரவைக்காக வெளி  மாவட்டங்களில் உள்ள நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பிவைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இதன்படி, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் 150 லாரிகளில் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு சனிக்கிழமை கொண்டுவரப்பட்டன.

    நெல் மூட்டைகளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரயிலின் 42 பெட்டிகளில் ஏற்றினர். இதைத்தொடர்ந்து, நெல் மூட்டைகள் அரவைக்காக தருமபுரிக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai