சுடச்சுட

  

  தியாகராஜசுவாமி கோயிலில் 2 ஆவது நாளாக நாட்டியாஞ்சலி

  By திருவாரூர்  |   Published on : 06th March 2016 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாரூர் தியாகராஜசுவாமி  கோயிலில் 2 ஆவது நாளாக சனிக்கிழமை நாட்டியாஞ்சலி நடைபெற்றது.

  மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் நாட்டியாஞ்சலி விழா மார்ச் 4 (வெள்ளிக்கிழமை) தொடங்கி மார்ச் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலகின் தலைசிறந்த நடனக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

  நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் 2ஆவது நாள் நிகழ்வாக சனிக்கிழமை, சென்னை அர்ச்சனா மகேஷ் குழுவினரின் பரத நாட்டியம், சென்னை சாய்கிருபா குழுவினரின் நாட்டிய நாடகம், கேரளம் அனுபாமா மோகன் குழுவினரின் நாட்டிய நாடகம், ஆஸ்திரேலியா தமயந்தி பால்ராஜ் குழுவினரின் பரத நாட்டியம், சென்னை மிர்ணாலினி தியாகராஜன் குழுவினரின் பரதநாட்டியம் ஆகியவை நடைபெற்றன.

  ஆஸ்திரேலியா தமயந்தி பால்ராஜ் குழுவினர் சிவபெருமானின் 108 கரணங்கள், பக்திப் பாடலுக்கு நாட்டியமாடினர். இந்தக் குழுவில் 7 பேர் பங்கேற்றனர். இதுகுறித்து ஆஸ்திரேலியா தமயந்தி பால்ராஜ் கூறியது: நான் 2008 முதல் இதுவரை 9 ஆண்டுகளாக திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்று வருகின்றேன். என்னுடன் 7 மாணவிகள் பங்கேற்றுள்ளனர். இதில் 2 பேர் மருத்துவத்துறை மாணவிகள். 4 பேர் கல்லூரி மாணவிகள். எங்கள் நடனத்தை சிவனுக்கு பக்தியோடு அர்ப்பணிக்கிறோம். ஆண்டுதோறும் இக்கோயிலில் நடனமாடுவதைப் பெரும் பாக்கியமாக கருதுகிறோம். இதேபோல், தஞ்சை பெரியகோயிலில் நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் 5 ஆண்டுகளாக பங்கேற்றுள்ளோம் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai