சுடச்சுட

    

    திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சக்கர நாற்காலி

    By திருவாரூர்  |   Published on : 06th March 2016 05:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாரத ஸ்டேட் வங்கி தனது சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 சக்கர நாற்காலிகள், 10 ஸ்டெச்சரை சனிக்கிழமை வழங்கியது.

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தங்களது லாபத்தில் 1 சதவீதம் சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் பயன்பெறும் வகையில் செலவிடுகிறது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கி திருவாரூர் கிளை சார்பில், கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 10 சக்கர நாற்காலிகள், 10 ஸ்டெச்சர் வழங்கப்பட்டன.

    மருத்துவக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கி திருவாரூர் கிளை முதன்மை மேலாளர் உதயகுமார் சக்கர நாற்காலிகள், ஸ்டெச்சரை வழங்க, அதை மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் பெற்றுக்கொண்டார்.

    இதில் மருத்துவர் சுந்தர், விளமல் வங்கி கிளை மேலாளர் கங்காராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai