Enable Javscript for better performance
தேர்தல் நடத்தை விதியை முழுமையாக கண்காணிக்க சிபிஐ வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    தேர்தல் நடத்தை விதியை முழுமையாக கண்காணிக்க சிபிஐ வலியுறுத்தல்

    By திருவாரூர்  |   Published on : 06th March 2016 05:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை  விதியை முழுமையாகக் கண்காணிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்ற கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு மற்றும் ஒன்றிய, நகரச் செயலர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதர தீர்மானங்கள்: தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த நிலையில், மாவட்டத்தில் அகற்றப்படாமல் உள்ள  விளம்பரப் பதாகைகள் மற்றும் சுவர் விளம்பரங்களை நீக்க வேண்டும். கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர்  சந்திப்பில் பாஜக தேசியச் செயலர் எச். ராஜா, சிபிஐ கட்சியின் மூத்தத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியது கண்டிக்கத்தக்கது.

    இதுகுறித்து திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனு மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் அம்புஜம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் மாநில  செயற்குழு உறுப்பினர் கோ. பழனிச்சாமி, மாவட்டச் செயலர் வை. செல்வராஜ், திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் கே. உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai