சுடச்சுட

    

    "தொகுதி வாரியாக தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்'

    By நீடாமங்கலம்  |   Published on : 06th March 2016 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மே 16 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி திருவாரூர் மாவட்டத்தில் தொகுதி வாரியாக தேர்தல் ஆணையம் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன் கூறினார்.

    இதுகுறித்து நீடாமங்கலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

    தமிழக சட்டப்பேரவைக்கு மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மார்ச் 4 முதல் அமல்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகும் வாக்காளர்களுக்கு இலவச பொருள்கள் வழங்குவதற்காக பல இடங்களில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. இத்தகைய பிரச்னைகள் குறித்து தொகுதி வாரியாக தேர்தல் அதிகாரிகளிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும். மேலும், உளவுத்துறையும் இதை கண்காணித்து தேர்தல் ஆணையம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai