Enable Javscript for better performance
பூனூர் கோயிலில் நாளை மகா சிவராத்திரி விழா- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலம் வட்டம், பூவனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா திங்கள்கிழமை (மார்ச்) நடைபெறுகிறது.

    மூர்த்தி, தீர்த்தம், தலம் இம்மூன்றிலும் சிறப்புற்று விளங்குகிறது இக்கோயில்.

    இக்கோயிலில் மகா சிவராத்திரி விழா திங்கள்கிழமை நடைபெறுவதை முனிட்டு, மார்ச் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பால்குட அபிஷேகம், இரவு அம்பாள் புறப்பாடு, கரகம், தீச்சட்டி எடுத்தல் நடைபெறுகிறது.

    செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) காலை 10 மணிக்கு மயான ருத்திரன், அம்பாள் புறப்பாடு, மார்ச் 9 ஆம் தேதி பெரியாச்சி புறப்பாடு விடையாற்றி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி ஆர். மோகன்ராஜ் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai