Enable Javscript for better performance
\\\"பேரவைத் தேர்தல் முடியும்வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பேரவைத் தேர்தல் முடியும்வரை குறைதீர் கூட்டங்கள் நடைபெறாது'

    By திருவாரூர்  |   Published on : 06th March 2016 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை எவ்விதமான குறைதீர் கூட்டங்களும் நடைபெறாது என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், மார்ச் 4-ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.

    இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம்  தேர்தல் முடியும் வரை நடைபெறாது.

    இதேபோல், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும்  கோட்டாட்சியர் அலுவலர்களால் நடத்தப்படும் மக்கள் நேர்காணல் முகாம் மற்றும் இதர குறைதீர் கூட்டங்கள்  தேர்தல் முடியும் வரை நடைபெறாது. தேர்தல் நடத்தை  விதிகள் முடிவுற்ற பிறகு அனைத்துக் கூட்டங்களும் வழக்கமாக நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai