சுடச்சுட

  

  பேருந்தில் முதியவரிடம் ரூ. 1 லட்சம் திருட்டு

  By திருவாரூர்  |   Published on : 06th March 2016 05:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பேருந்தில் பயணம் செய்த முதியவரிடமிருந்து ரூ. 1 லட்சத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  குடவாசல் அருகேயுள்ள பெரும்பண்ணையூரைச்  சேர்ந்தவர் ரத்தினசாமி (70). இவர் வியாழக்கிழமை நெல் விற்று வீட்டில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, குடவாசலில் உள்ள பாண்டியன் வங்கியில் அடகு வைத்த நகையை திருப்பச் சென்றார். வங்கியில் இன்னும் நகைத் திருப்ப நாள் இருக்கிறது என்று தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, நகையை பிறகு திருப்பிக்கொள்ளலாம் என்று ரத்தினசாமி குடவாசலில் இருந்து பெரும்பண்ணையூருக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளார்.

  பெரும்பண்ணையூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது தாம் பையில் வைத்திருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து ரத்தினசாமி வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், குடவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai