சுடச்சுட

    

    மனைவிக்கு அரிவாள் வெட்டு: கணவர் மீது வழக்குப் பதிவு

    By நீடாமங்கலம்  |   Published on : 06th March 2016 05:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

    நீடாமங்கலம் அருகேயுள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளி இளம்வழுதி. இவரது மனைவி விமலா (32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பப் பிரச்னை காரணமாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

    இந்நிலையில், தம்பதி இடையே  வெள்ளிக்கிழமை இரவு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளம்வழுதி அரிவாளால் விமலாவை வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த விமலா திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த நீடாமங்கலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து நீடாமங்கலம் போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, இளம்வழுதியை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai