சுடச்சுட

  

  இறுதி ஊர்வலத்தில் வெடி வெடித்து தீ விபத்து: 13 குடிசைகள் தீக்கிரை

  By திருவாரூர்  |   Published on : 07th March 2016 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், பேரளத்தில் சனிக்கிழமை இறுதி ஊர்வலத்தின்போது வெடி வெடித்து தீப்பிடித்ததில் 13 குடிசைகள் தீக்கிரையாகின.

  பேரளம் பகுதியைச் சேர்ந்த ஜீவா (50), இயற்கை மரணமடைந்ததையொட்டி, இறுதிச் சடங்கு சனிக்கிழமை பேரளம் தேரடி தெரு வழியாகச் சென்றது. அப்போது, வெடி வெடித்ததில் தீப்பொறி பட்டு, காந்திமதியின் குடிசை வீடு தீப்பிடித்தது. மேலும், அருகேயுள்ள கார்த்திக் வீடு உள்பட 13 வீடுகளுக்கு தீ பரவியது.

  தகவலறிந்த பேரளம் தீயணைப்புத்துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். எனினும், தீ விபத்தில் 13 குடிசை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

  இதுகுறித்து பேரளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai