சுடச்சுட

  

  மகா சிவராத்திரியை முன்னிட்டு, திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் “தென்னாட்டுடைய சிவனே போற்றி’ நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

  உலகப் பிரசித்திப் பெற்ற சைவ சமயத்தின் தலைமைப் பீடமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, மார்ச் 4 ஆம் தேதி முதல் நாட்டியம் மற்றும் நாட்டிய நாடக விழா நடைபெற்று வருகிறது.

  நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் 3-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் ரூக்குமணி விஜயகுமார் குழுவினரின் பரதநாட்டியம், பெங்களூர் ராதா கல்பனா நடனப்பள்ளி குழுவினரின் பரதநாட்டியம், சென்னை லட்சுமி ராமசாமி குழுவினரின் நாட்டிய நாடகம் நடைபெற்றது.

  இதையடுத்து, சென்னை கனகசபை ஸ்கூல் ஆப் பரதநாட்டியக் குழுவினரின் “தென்னாட்டுடைய சிவனே போற்றி’ நாட்டிய நாடகம் நடைபெற்றது.

  தொடர்ந்து, சென்னை சுவாதி குழுவினரின் கதக் நாட்டியம், மும்மை பத்மினி குழுவினரின் பரதநாட்டியம் நடைபெற்றது. 4 ஆவது நாளாக திங்கள்கிழமை பரதநாட்டியம், மோகினி ஆட்டம், வீராட்டம், குச்சுப்பிடி மற்றும் வேலூர், பழனி, கோவை, திருவாரூர், சிதம்பரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai