சுடச்சுட

    

    "திருவாரூர் மாவட்டத்தில் 9.68 லட்சம் வாக்காளர்கள்'

    By திருவாரூர்  |   Published on : 07th March 2016 12:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 9,68,841 வாக்காளர்கள் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    20.1.2016 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, திருத்துறைப்பூண்டி தொகுதியில் 1,10,978 ஆண்களும், 1,11,401 பெண் வாக்காளர்களும் ஒரு திருநங்கை என மொத்தம் 2,22,380 வாக்காளர்கள் உள்ளனர். மன்னார்குடி தொகுதியில் 1,19,176 ஆண்களும், 1,21,721 பெண்களும், இரு திருநங்கைகள் என மொத்தம் 2,40,899 வாக்காளர்கள் உள்ளனர்.

    திருவாரூர் தொகுதியில் 1,25,424 ஆண்களும், 1,27,029 பெண்களும், 13 திருநங்கைகள் என மொத்தம் 2,52,466 வாக்காளர்கள் உள்ளனர்.

    நன்னிலம் தொகுதியில் 1,28,719 ஆண்களும், 1,24,376 பெண் வாக்காளர்களும், ஒரு திருநங்கை என மொத்தம் 2,53,096 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் கூடுதலாக 17 திருநங்கைகள் உள்ளிட்ட 9,68,841 வாக்காளர்கள் உள்ளனர். திருத்துறைப்பூண்டி தொகுதியில் 269 வாக்குச்சாவடிகள், மன்னார்குடியில் 277 வாக்குச்சாவடிகள், திருவாரூரில் 300 வாக்குச்சாவடிகள், நன்னிலத்தில் 304 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 1150 வாக்குச்சாவடிகள் உள்ளன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai