சுடச்சுட

    

    முத்துப்பேட்டையில் வர்த்தகர் கழகக் கூட்டம்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 07th March 2016 12:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்துப்பேட்டையில் வர்த்தகர் கழக செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விழாவுக்கு முத்துப்பேட்டை வர்த்தகர் கழகத் தலைவர் இரா. ராஜாராம் தலைமை வகித்தார். கெளரவ தலைவர் இரா. திருஞானம் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயல்பாடு குறித்து பொதுச் செயலர் கே.வி. கண்ணன் பேசினார். பொருளாளர் மு. முகைதீன் பிச்சை நிதிநிலை அறிக்கை வாசித்தார். துணைச் செயலர் மாரிமுத்து வரவேற்றார்.

    விழாவில் தமிழக முதல்வர் விருது பெற்ற முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜ்குமாருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

    முத்துப்பேட்டை நகரப் பகுதியில் சாலை ஓரங்களில் உள்ள மணல்களை பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

    இதில் செயற்குழு உறுப்பினர்கள் கே.எம். ஹைதர் அலி, எஸ். ராஜேஷ்கண்ணா, சகாபுதீன், எம். செல்வம், பி. பாலகுமார், எம். நூருல் அமின், ஹகீம், கோவிந்தராஜ், தாவூது அடுமை, பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். துணைச் செயலர் பழனிதுரை நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai