சுடச்சுட

    

    "ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலிமையான சட்ட திட்டங்களை திருக்குறள் கொடுத்துள்ளது'

    By திருவாரூர்  |   Published on : 08th March 2016 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலிமையான சட்ட திட்டங்களை திருக்குறள் வகுத்துக் கொடுத்துள்ளது என்றார் திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வி. சிவஞானம்.

    திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் கலைக் கல்லூரியில் அண்மையில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் நேதாஜி கல்லூரி சார்பில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில் மேலும் அவர் பேசியது:

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் சட்ட திட்டங்களை எளிமையாக வகுத்துக் கொடுத்திருப்பதுடன், வாழ்வியல் நெறிமுறைகளையும் அறம், பொருள், இன்பம் என வகுத்துக் கொடுத்துள்ளது.

    திருக்குறளின் அறநெறிகளைப் பின்பற்றினாலே மனித சமூகத்துக்கு நேர்மையான வாழ்க்கை கிடைக்கும். திருக்குறள் நெறிப்படி வாழ வேண்டிய நாம் இன்று பல குற்றங்கள் நடைபெற துணைபோகிறோம். மனிதர்களாகிய நாம் அன்பு, சகோதரத்துவம் ஆகியவற்றோடு வாழ வேண்டும். நடைமுறைச் சட்டங்களைப் பின்பற்றி நேர்மையாக ஒரு சிறந்த இந்தியனாக வாழ வேண்டுமென்றார் சிவஞானம். தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய சட்ட நுணுக்கங்கள் குறித்து மாவட்ட சார்பு நீதிபதி ஜி. அனுராதா, மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர்.

    கருத்தரங்கில் கல்லூரி தாளாளர் முனைவர் சு. வெங்கட்ராஜலு, வழக்குரைஞர் சங்கத் தலைவர் சத்தியமூர்த்தி, செயலர் வி. பிரபாகரன் மற்றும் வழக்குரைஞர்கள் ஆர். தரணி, மணிகண்டன், முத்தையன், கல்விக் குழுமச் செயலர் வி. சுந்தர்ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai