சுடச்சுட

  

  முத்துப்பேட்டை சிதம்பரம் ராமஜெயம் அறக்கட்டளை சார்பில் காலஞ்சென்ற அரிமா சங்க மண்டலத் தலைவர் கண்தான வள்ளல் சி.ராஜப்பா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சித.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.

  மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ராமசரண் யசோதா, மகாலெட்சுமி ஆகியோர் தலைமையிலான மருத்துவர்கள் பங்கேற்றனர். 152 நோயாளிகள் மதுரைக்கு அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

  முகாம் ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகி ஆர்.ராம்மோகன் மற்றும் ஏ.ராஜீவ்காந்தி, அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai