Enable Javscript for better performance
ஒஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலம் சேதம்:நிவாரணம் வழங்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    ஒஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விளைநிலம் சேதம்:நிவாரணம் வழங்கக் கோரிக்கை

    By திருவாரூர்  |   Published on : 08th March 2016 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் அருகே திங்கள்கிழமை ஓஎன்ஜிசி நிறுவனத்தின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலம் சேதமடைந்துள்ளதால் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருவாரூர் அருகே தென்கரை வேலங்குடியைச் சேர்ந்தவர் விவசாயி ரத்னவேலு சுப்பிரமணியன்.

    இவருக்கு 5.5 ஏக்காó விவசாய நிலம் உள்ளது. சம்பா அறுவடைக்குப் பிறகு பச்சைப் பயிறு சாகுபடி மேற்கொண்டுள்ளார். இவரது விளைநிலத்தின் அடியில் ஒஎன்ஜிசி நிறுவன குழாய் பதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திங்கள்கிழமை ஒஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வெளியேறிய ரசாயனம் நிலத்தில் முழுவதும் பரவி பயிரிடப்பட்ட பயிறு சாகுபடி சேதமடைந்துள்ளது.

    இந்த விவசாயியின் நிலம் சேதமடைந்திருப்பது மற்ற விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai