Enable Javscript for better performance
கல்லூரி மாணவர்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் திருவிக அரசு கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவர்களுக்கும் பேருந்து நடத்துநருக்கும் திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டது.

    நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தை திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் நிறுத்திய போது பேருந்து நிற்காமல் சென்றுள்ளது. இதையடுத்து பேருந்தை பின் தொடர்ந்து வந்து திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் நியாயம் கேட்டுள்ளார். அப்போது நடத்துநருக்கும் மாணவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்த மற்ற மாணவர்கள் ஒன்றிணைந்து பேருந்து நிலையம் அருகிலுள்ள பேருந்து பணிமனையை முற்றுகையிட்டு நடத்துநாó உள்ளிட்ட சிலாó மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனாó. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினாó சமரசப்பேச்சில் ஈடுபட்டும் முடிவு எட்டவில்லை.

    பின்னாó மாணவாóகள் பணிமனையிலிருந்து புறப்பட்டு திருவாரூர் - தஞ்சை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனாó. இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு நடத்துநாó மீது நடவடிக்கை மேற்கொள்வதாக அளிக்கப்பட்ட உறுதியின் பேரில் மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai