Enable Javscript for better performance
டிராக்டர் மோதி குட்டையில் சைக்கிளுடன் விழுந்த கிராமப் பணியாளர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    டிராக்டர் மோதி குட்டையில் சைக்கிளுடன் விழுந்த கிராமப் பணியாளர் சாவு

    By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 08th March 2016 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருத்துறைப்பூண்டி அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்த கிராமப் பணியாளர் மீது டிராக்டர் மோதியதில் குட்டையில் விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தார்.

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேப்பஞ்சேரி கீழத்தெருவைச் சேர்ந்தவர் இடும்பன் மகன் அருள்முருகன் (35).

    இவர் கள்ளிக்குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். இவர் திங்கள்கிழமை காலை கள்ளிக்குடி கிராமத்திற்கு பணிக்காக சைக்கிளில் கிழக்கு குடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த டிராக்டர் மோதியதில் சைக்கிளுடன் அருகில் இருந்த குட்டையில் விழுந்து மூழ்கினார்.

    இவர் மீது மோதிய டிராக்டர் குட்டையின் மறு பகுதியில் கவிழ்ந்தது. இந்நிலையில் அருள்முருகனை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக எடையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து டிராக்டரை ஓட்டிவந்த நெடும்பலத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai