சுடச்சுட

  

  திருவாரூர் தியாகராஜர் கோயிலில் திங்கள்கிழமை மகா சிவராத்திரியையொட்டி சுவாமிக்கு நான்கு கால பூஜை நடைபெற்றது.

  திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி நாள் கொண்டாடப்பட்டது. தியாகராஜர் கோயில் உள்ளிட்ட அனைத்துக் கோயிலிலும் திங்கள்கிழமை இரவு முழுவதும் 4 கால பூஜை நடைபெற்றது.

  தியாகராஜர் கோயிலுக்குள் பிரதான சன்னதி மற்றும் 63 நாயன்மார்கள், ருணவிமோட்சர், கால பைரவர், முருகன், விநாயகர் ஆகிய சன்னதிகளில் பக்தர்கள் தீபவிளக்கு ஏற்றி வழிபட்டனர். கால பைரவர் சுவாமி நான்கு வீதிகளிலும் வீதியுலா வந்தார். கோயிலுக்குள் பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

  கோயில்களில் பக்தர்களுக்கு சிறப்பு வழிபாட்டு முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் மற்றும் பஜனைகள் நடைபெற்றன.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai