சுடச்சுட

  

  திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி நடைபெற்று வரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் திங்கள்கிழமை மோகினி ஆட்டம் நடைபெற்றது.

  உலகப் புகழ் பெற்ற சைவ திருக்கோயில்களில் சிறந்து விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் மகா சிவராத்திரி திங்கள்கிழமை இரவு கொண்டாடப்பட்டது. இவ்விழாவை யொட்டி திருவாரூர் நாட்டியாஞ்சலி குழு ஏற்பாட்டில் மார்ச் 4-ம் தேதியிலிருந்து கோயில் வளாக நாட்டிய அரங்கில் மாலை 6 மணிக்கு மேல் நள்ளிரவு வரை பரத நாட்டியம், நாட்டிய நாடகம் நடைபெற்று வருகிறது.

  4-வது நாளான திங்கள்கிழமை சென்னையைச் சேர்ந்த சுதா விஜயகுமார் குழுவினர், டாப்பஸ் அகாதெமி குழுவினர், நடாசா குழுவினர், பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவினரின் பரத நாட்டியம், சென்னை சரஸ்வதி கலாகேந்த்ரா குழுவினரின் ஆட்டம், வீராட்டம், மலேசியா ஈஸ்வரன் முத்துக்குமரனின் பரதநாட்டியம்.

  திருவாரூர் அரசு இசைப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் கிட்டப்பா நாட்டியாலயா குழுவினர், கோவை வழுவூர் பழனியப்பன் குழுவினர், வேலூர் ஸ்ரீகிருஷ்ண கலா மந்திர் குழுவினர், சிதம்பரம் நடராஜ நாட்டியப் பள்ளி குழுவினர், பழனி உமாமகேஸ்வரி கலைக்கூடக் குழுவினரின் பரதநாட்டியம், திருச்சூர் மாளவிகா நாயர், சென்னை தீபா குழுவினரின் மோகினி ஆட்டம், சென்னை பத்மவாணி குழுவினரின் குச்சுப்புடி, தில்லி சிட்சபேச நிரித்தியாலயா குழுவினரின் நாட்டிய நாடகம் நடைபெற்றது. நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் திரளான கலை ரசிகர்கள் பங்கேற்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai