சுடச்சுட

  

  நாகநாத சுவாமி ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா

  By திருத்துறைப்பூண்டி,  |   Published on : 08th March 2016 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி அருள்மிகு நாகநாத சுவாமி முத்து மாரியம்மன் ஆலயத்தில் மகா சிவராத்திரி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  கள்ளிக்குடி முத்து மாரியம்மன் ஆலயம், ஸ்ரீநாகநாத சுவாமி ஆலயங்களில் பூச்சொரிதலுடன் மார்ச் 1-இல் உற்சவம் தொடங்கியது.

  இதைத்தொடர்ந்து முத்து மாரியம்மனுக்கு சந்தனக்காப்பு சார்த்தி, பூச்சொரிதலுடன் மகாசிவராத்திரி உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

  மகா சிவராத்திரியை முன்னிட்டு காவடி எடுத்தல், பால் குடம், அலகு குத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் ஸ்ரீ நாகநாத சுவாமிக்கு திங்கள்கிழமை இரவு நான்குகால சிறப்பு வழிபாடுகளும், 1,008 சங்காபிஷேகமும் நடைபெற்றது.

  இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழுத் தலைவர் அ.ரவி, அறங்காவலர்கள் என்.ஏ.ஜி. சண்முகவடிவேல், கே.வி.ராஜேந்திரன் திருப்பணிக்குழு செயலர் ஜி.பாலசுப்பிரமணியன் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai