சுடச்சுட

    

    முதல் மனைவி இருப்பதை மறைத்து 2-வது திருமணம் செய்தவர் மீது வழக்கு

    By திருவாரூர்  |   Published on : 08th March 2016 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதல் மனைவி இருப்பதை மறைத்து 2-வது திருமணம் செய்து கொண்டவர் மீது நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே வெள்ளக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் மகள் பிரியா (27). இவரை குடவாசல் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த மதுசூதனன் என்பவர் காதலித்து வந்துள்ளார்.

    இவர்களின் காதல் பிரியாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளதையடுத்து கடந்த 25.5.2014-ல் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர் பிரியா குடும்பத்தினர்.

    இந்நிலையில் பிரியா 5 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவரின் கருவை கலைக்க மதுசூதனன் வலியுறுத்தியுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு பிரியா தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், மதுசூதனன் மீது சந்தேமடைந்து விசாரித்துப் பார்த்த போது மதுசூதனனுக்கு ஏற்கெனவே திருமணமாகி 9 வயதில் ஓர் ஆண் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. இதையறிந்த பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் மதுசூதனன் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai