சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

    வழக்குரைஞர்களுக்கு சேமநல நிதி ரூ.20 லட்சமாக உயர்த்த வேண்டும், அனைத்து நீதிமன்றங்களிலும் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்குரைஞர்கள் சங்கத்தினர் திருவாரூர் மாவட்டத்தில் நீதிமன்றப் பணி புறக்கணிப்பு செய்தனர்.

    திருவாரூர் நீதிமன்றத்தில் 6 பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட 70 பேர், நன்னிலத்தில் 3 பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட 20 பேர், மன்னார்குடியில் 10 பெண் வழக்குரைஞர்கள் உள்ளிட்ட 120 பேர், நீடாமங்கலத்தில் 3 பெண் வழக்குரைஞர் உள்ளிட்ட 14 பேர், திருத்துறைப்பூண்டியில் 75 வழக்குரைஞர்கள் என மாவட்டம் முழுவதும் நீதிமன்றப் பணியிலிருந்து புறக்கணிப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்குரைஞர்களின் இந்த நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தால் திங்கள்கிழமை நீதிமன்ற பணிகள் முழுவதும் பாதிக்கப்பட்டன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai