சுடச்சுட

  

  அடியக்கமங்கலம் பள்ளியில் உலக மகளிர் தின விழா

  By திருவாரூர்  |   Published on : 09th March 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் உலக மகளிர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு நுகர்வோர் மன்ற நெறியாளர் ந. தமிழ்காவலன் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்ற வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பிருந்தா மாணவர்களின் தேர்ச்சி விகித வெற்றி மற்றும் மன ஒருமைப்பாடு குறித்து பேசினார். பெற்றோர்கள் சார்பில்  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாற்றுத் திறனாளி மாணவியின் தாய் கமலா, உறவு முறைத் திருமணம் மற்றும் அதன் இழப்புகள் குறித்து பேசினார்.

  முதன்மை கருத்துரை வழங்கிய வட்டார வளமைய முதன்மை பயிற்றுநர் சங்கீதா, பெண்கள் தங்களை அறிவதோடு, நல்ல சமுதாயம் உருவாக முன்னின்ற பெண் தலைவர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்றார். இதில் தமிழாசிரியர் இளமதி, பெண்களின் சம உரிமைக் குறித்தும் அதற்கான சம உழைப்பு குறித்தும் பேசினார். அலுவலக உதவியாளர் ரேணுகா, மாணவி கவிதா உள்ளிட்டே பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai