சுடச்சுட

    

    "ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்களின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும்'

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 09th March 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்களின் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக  அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:

    தமிழகத்தில் ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்கள் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளின் விளைநிலங்களை  அபகரித்து குழாய் பதித்து வருகின்றனர்.

    இதனால் பல இடங்களில் விளைநிலங்களில்  எண்ணெய் கசிவு ஏற்பட்டு, தீ விபத்துகளால் விளைநிலங்கள் பாதிப்படைந்துள்ளன. பல கிராமங்களில் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளன.

    ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்கள் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுப்பத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறோம்.

    எனவே, தமிழகத்தில் ஓஎன்ஜிசி, கெயில் நிறுவனங்களின் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai