சுடச்சுட

    

    தியாகராஜசுவாமி கோயிலில் நாட்டியாஞ்சலி நிறைவு

    By திருவாரூர்  |   Published on : 09th March 2016 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகா சிவராத்திரியையொட்டி, திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது.

    திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தொடங்கியது.

    நாள்தோறும் மாலை 6 முதல் நள்ளிரவு வரை திருவாரூர், சென்னை, மும்பை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நடனக் கலைஞர்கள் பங்கேற்று பரதநாட்டியம், நாட்டிய நாடகம் நடத்தினர்.

    மகா சிவராத்திரியையொட்டி, திருவாரூர் தியாகராஜர் கோயில் மட்டுமின்றி மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் திங்கள்கிழமை இரவு 4 கால பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் விழித்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை சென்னையைச் சேர்ந்த லலிதா கணபதி குழுவினர், பரதநாட்டியாலயா குழுவினர், பரத கலாஞ்சலி குழுவினர், ஸ்ரீதேவி நாட்டியக் கலாலய குழுவினர், பாக்யஸ்ரீ குழுவினர், சதிர் நடனக் குழுவினரின் பரத நாட்டியம் நடைபெற்றது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai