சுடச்சுட

  

  திருவாரூரில் வணிகவரித்துறையில் கணினிமயமாக்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வணிகர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழக அரசு அமல்படுத்தவுள்ள வணிகர்களை பாதிக்கும் வணிகவரித்துறையில் புதிய கணினிமயமாக்கல் திட்டத்தை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டும். தமிழக அரசின் டிஎஸ்பி என்கிற ஒட்டுமொத்தத் தீர்வுத் திட்டம் வணிகர்களை பல்வேறு வகையில் பாதிக்கச் செய்யும். எனவே, உடனடியாக இத்திட்டம் குறித்து விரைவு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  வணிகர்களின் கணக்குகளை வணிக இடத்திலேயே பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு மாத இறுதியிலும் சரக்கு இருப்பை கணக்கிட்டு கூறவேண்டுமென்ற முடிவை கைவிட வேண்டும். எந்த சட்டவிதிகளும் எளிமையாக இல்லையெனில் அங்கு ஊழல் நடைபெறும். ஊழலுக்கு வழிவகை செய்யக்கூடாது.

  வணிகர்கள் வைத்திருக்கும் கணினியில் என்ன மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது என்பதை பதிவு செய்ய வேண்டுமென்பது வணிகர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல். இதைத் தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai