சுடச்சுட

    

    மினி லாரி கவிழ்ந்து ஒருவர் சாவு: 4 பேர் படுகாயம்

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 09th March 2016 08:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முத்துப்பேட்டை அருகே வேகமாக சென்ற மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மினிலாரியில் சென்ற ஒருவர் பலியானார். 4 பேர் காயமடைந்தனர்.

    மருதவனம் கிராமத்திலிருந்து தனியார் மைக்செட் கடை ஊழியர்கள் மினி லாரியில் ஒலிபெருக்கி, மின் விளக்குகளை ஏற்றிக் கொண்டு திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டைக்குச் சென்று கொண்டிருந்தனர். கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் சென்றபோது எதிரே வந்த லாரிக்கு இடம் கொடுப்பதற்காக மினி லாரி ஓட்டுநர் சாலையோரம் ஒதுங்கியுள்ளார்.

    அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, மினிலாரி சாலையோரம் உள்ள தடுப்புத் தூணில் மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மினி லாரியில் சென்ற மீனம்பநல்லூரைச் சேர்ந்த காத்தமுத்து மகன் சுரேஷ் (40), மருதவனத்தைச் சேர்ந்த மதியழகன் மகன் தமிழ் (25), சின்னப்பிள்ளை மகன்கள் மகேந்திரன் (32), சரவணன் (28), சீலத்தநல்லூரைச் சேர்ந்த மணியன் மகன் ஓட்டுநர் வீரச்செல்வம் (28) ஆகிய 5 பேரும் பலத்த காயமடைந்தனர்.

    பலத்த காயமடைந்த சுரேஷ், தஞ்சாவூர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த 4 பேரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai