சுடச்சுட

    

    முத்துப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு தமிழக முதல்வர் விருது

    By திருத்துறைப்பூண்டி  |   Published on : 09th March 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை  காவல் நிலைய ஆய்வாளர் ராஜ்குமார், மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தீவிரவாதத் தடுப்புப் பயிற்சியில் சிறப்பிடம் பெற்றதற்காக அவரைப் பாராட்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதா அண்மையில் விருது வழங்கி கெளரவித்தார்.

    கடந்த 2013 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலம், டெக்கான்பூர் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாமில், இந்திய அளவிலான தீவிரவாத எதிர்ப்பு  மற்றும் கட்டுப்படுத்துதல் குறித்த ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது.

    இதில் முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் டி. ராஜ்குமார் பங்கேற்று, குறிபார்த்து சுடுதல், மணல் மூட்டையை சுமந்தபடி இலக்கை நிர்ணயித்த நேரத்துக்குள் அடைதல், 20 தடைகள் கொண்ட பாதையை தடைதாண்டி அடைதல், தீவிரவாதிகளைக் கண்டறிந்து முற்றுகையிட்டு சுற்றி வளைத்தல் (ஸ்மால் டீம் ஆபரேஷன்) போன்ற பயிற்சி போட்டிகளில் 2 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளி பதக்கம் பெற்றார்.

    சென்னை தலைமை செயலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத்துப்பேட்டை காவல் ஆய்வாளர் ராஜ்குமாரை பாராட்டி முதல்வர் ஜெயலலிதா விருது மற்று ரொக்கப் பரிசு வழங்கினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai