சுடச்சுட

    

    ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கு: ஏப். 26-க்கு ஒத்திவைப்பு

    By நீடாமங்கலம்  |   Published on : 09th March 2016 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரிஷியூர் வீடு இடிப்பு வழக்கை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

    நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூரைச் சேர்ந்தவர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சோம. தமிழார்வன். இவரது கார் ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் மனைவி கஸ்தூரி. இவருக்குச் சொந்தமான வீடு கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி இடிக்கப்பட்டது.

    இதுதொடர்பா, கஸ்தூரி கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 21-இல் திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

    இதில் தனது வீடு இடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி, நீடாமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து ரிஷியூர் வீடு இடிப்பு சம்பவம் தொடர்பாக சசிகலாவின் தம்பி மன்னார்குடி திவாகரன், ரிஷியூர் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணமேனன், தமிழ்ச்செல்வன், ராஜேந்திரன், வைத்தியநாதன், கணேசன், காந்தி (எ) குணசேகரன், பொக்லைன் இயந்திர உரிமையாளர் வீரசிவசங்கர், பொக்லைன் ஓட்டுநர் சக்தி உள்பட 9 பேரை கைது செய்தனர். பின்னர், அனைவரும் ஜாமீனில் வெளி வந்தனர்.

    இந்த வழக்கு நீடாமங்கலம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏப். 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai