Enable Javscript for better performance
\\\"வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்துக்கு மேல் எடுத்தால் விளக்கம் அளிக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்துக்கு மேல் எடுத்தால் விளக்கம் அளிக்க வேண்டும்'

    By திருவாரூர்  |   Published on : 09th March 2016 08:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால், வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்துக்கு மேல் பணம் எடுத்தாலோ அல்லது சேமித்தாலோ அதற்குரிய விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் கூறினார்.

    திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் குறித்து வங்கியாளர்களுக்கான  கூட்டத்தில் ஆட்சியர் பேசியது:

    தேர்தல் நடைமுறையின்போது தனிநபர் வங்கிக் கணக்கிலிருந்து சந்தேகப்படும் வகையில் பணம் எடுப்பது குறித்து நாள்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும்.

    லட்சத்துக்கு மேல் யாரேனும் பணம் எடுத்தாலோ அல்லது சேமிப்பு செய்தாலோ அதுகுறித்து விவரம் அளிக்க வேண்டும்.

    தொகுதியில் ஒரு வங்கி கணக்கிலிருந்து பல நபர்களின் கணக்குகளில் தொகையை மாற்றுதல், வேட்பாளர் அல்லது அவருடைய வாழ்க்கை துணைவி அல்லது அவரைச் சார்ந்திருப்பவர் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுத்தல், சேமித்தல், அரசியல் கட்சியின் கணக்கில் ரூ. 1 லட்சத்துக்கு மேல் தொகை வைப்பீடு செய்தல்.

    வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க பயன்படுத்தக்கூடிய ஏனைய சந்தேகத்துக்கிடமான கொடுக்கல் வாங்கல், ரூ. 10 லட்சத்துக்கு மேல் தொகையை வங்கியில் செலுத்தும்போது அல்லது திரும்பப் பெறும்போது அது பற்றிய தகவலை உரிய வழியாக வருமானவரித் துறை ஒருங்கிணைப்பு அலுவலரிடம் வருமானவரிச் சட்டத்தின்கீழ் மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    வங்கியாளர்கள் ஏடிஎம்களுக்கு பணம் எடுத்துச் செல்லும்போது உரிய ஆதாரங்கள் வைத்திருக்க வேண்டும். ஏடிஎம்களுக்கு வங்கிகளால் அங்கீகரிக்கப்பட்ட முகமைகள் மற்றும் நிறுவனங்கள் வாகனங்களில் வங்கியின் பணத்தை தவிர, பிற பணங்களை எடுத்துச் செல்லவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    பணத்தை எடுத்துச் செல்லும் அங்கீகரிக்கப்பட்ட வாகனங்களில் பயணம் செய்யும் பணியாளர்கள் தகுந்த அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்குகளை பராமரிக்கத் தனியாக வங்கிக் கணக்கு தொடங்கி பராமரிக்க வேண்டும்.

    வேட்பாளர் தேர்தல் செலவு கணக்குகள் அனைத்தையும் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து குறுக்கு கோடிட்ட காசோலை மூலம் மேற்கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் த. மோகன்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்  சத்யநாராயணன், மாவட்ட வளர்ச்சி மேலாளர் (நபார்டு) ரவிசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai