Enable Javscript for better performance
வெடிகுண்டு வீசிய வழக்கு: நன்னிலத்தில் 6 பேர் சரண்- Dinamani

சுடச்சுட

    

    வெடிகுண்டு வீசிய வழக்கு: நன்னிலத்தில் 6 பேர் சரண்

    By திருவாரூர்  |   Published on : 09th March 2016 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சியில் அரசியல் கட்சி பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் நன்னிலம் நீதிமன்றத்தில் 6 பேர் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.

    திருச்சி வடக்கு காட்டூரைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் பேரவை மாணவரணி மாநில அமைப்பாளர் தமிழரசன் (31). இவர் கடந்த மார்ச் 6 ஆம் தேதி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, காட்டூர் பகுதியில் காரில் சென்றபோது கார் மீது தாக்குதல்  நடத்தப்பட்டதாம். இதுகுறித்து திருவெறும்பூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டம்,  நன்னிலம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றவியல் நடுவர் சுதா முன்னிலையில், திருச்சி அரியமங்கலம் ஈவெரா தெரு பெரியகருப்பன் மகன் அருள் (25),  முத்துப்பிள்ளைதெரு பாண்டியன் மகன் சசிகுமார் (23), காமராஜர் நகர் வேல்முருகன் மகன் மதன்குமார் (24), ஜோதிவேல் மகன் நாகராஜ் (23), காட்டூர் அண்ணாநகர் கோவிந்தராஜ் மகன் மதன்ராஜ் (22), கைலாசநகர் ராமன் மகன் பிரவீன் (24) ஆகிய 6 பேரும் சரணடைந்தனர். அனைவரையும் 15 நாள் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி சுதா, உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai