சுடச்சுட

  

  திருவாரூர் அருகே புதன்கிழமை செங்கல்சூளையில் பைப்வெடிகுண்டு வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

  திருவாரூர் புதுத்தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் வைரம் (எ) வைரக்கண்ணு (29), குமார்.

  இந்நிலையில், புதன்கிழமை அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி நிலையம் அருகே வைரக்கண்ணு நடந்து சென்றபோது, மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

  இதில் காயமடைந்த வைரக்கண்ணு திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  இதனிடையே, குமாருக்குச் சொந்தமான செங்கல்சூளை கீழக்காவாதகுடியில் உள்ளது. இந்த சூளையில், மர்ம நபர்கள் வெடி மருந்து நிரப்பிய பைப்குண்டை வயர் இணைப்பு மூலம் வெடிக்கச் செய்துள்ளனர். இதில் செங்கல்சூளையின் ஒருபகுதி சேதமடைந்தது. இவ்விரு சம்பவங்கள் குறித்து திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai